உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்த காட்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு

Published On 2022-06-25 10:54 GMT   |   Update On 2022-06-25 10:54 GMT
  • குடியாத்தத்தில் நடந்தது
  • பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

குடியாத்தம் :

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குடியாத்தம் நகர, ஒன்றிய 23வது மாநாடு நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணி கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமார், சித்ரா ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினர்.

இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கெங்கையம்மன் கோவில் தரை பாலத்தை போர்க்கால அடிப்படையில் மேம்பாலமாக கட்ட வேண்டும். ஆற்றோரம் நீர்நிலை பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் தரவேண்டும்.

வீடுகள்‌ இடிக்கப்ப ட்டவர்களுக்கு மாற்று இடம் தரும் வரை மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.

மோர்தானா அணையில் சுற்றுலா தளம் அமைக்க வேண்டும். குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை அனைவரும் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News