உள்ளூர் செய்திகள்
வணிக வளாகம் கட்ட வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்.
ரூ.85.59 லட்சத்தில் வணிக வளாகம்
- வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் கூட்டுறவு நகரமைப்பு சங்கம் சார்பில் வணிக வளாகம் கட்ட ரூ.85.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு அடி நாட்டினார்.
நிகழ்ச்சியில் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, பரமசிவம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கே.எஸ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.