ஒடுகத்தூர் அருகே படியில் சாகசத்தில் ஈடுப்பட்டு வரும் கல்லூரி மாணவர்கள்.
பஸ் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 900 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்க படிக்கும் மாணவர்கள் அணைக்கட்டு மாதனூர், மேலரசம்பட்டு, வேலூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கல்லூரிக்கு அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி செல்லும் போதும், வீட்டிற்க்கு செல்லும் போதும் பஸ்களில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய வாரும் ஓடிக்கொண்டே ஏரியும் வீர சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவிகள் இடத்தில் தங்களை ஹீரோவாக காட்டிக் கொள்வதற்காக மாணவர்கள் இதுபோன்ற பயணத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதால் கல்லூரி மாணவர்களுக்கு பேராபத்து ஏற்பட்டு முன் இதனை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே கல்லூரி விடும் நேரங்களில் போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்தி அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.