- ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வேலூர் வந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
வேலூர்:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராம் செட்டி. இவரது மகள் நாக சாய் பிரியா (வயது 23). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீகாந்த் ராம் செட்டிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக ஆந்திராவில் இருந்து ஸ்ரீகாந்த் ராம் செட்டியும், அவரது மகள் நாக சாய்பிரியாவும் வேலூருக்கு வந்தனர்.
அப்போது தோட்டப்பாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் நாக சாய்பிரியா தந்தையிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். வெகு நேரம் ஆகும் மகள் வர வில்லை. இதனால் ஸ்ரீகாந்த் ராம் செட்டி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அவர் கிடைக்காததால் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.