உள்ளூர் செய்திகள்

இங்கு பள்ளம் உள்ளது குறித்து அட்டைகளில் சிறுவர்கள் எழுதி தெருவில் வைத்துள்ளதை படத்தில் காணலாம்.

சிறுவர்கள் அட்டையில் எழுதி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Published On 2023-08-17 13:46 IST   |   Update On 2023-08-17 13:46:00 IST
  • சத்துவாச்சாரியில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது
  • சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 2-வது மண்ட லத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே கடந்த சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியில் விளையாடி க்கொண்டிருந்த சிறுவர்கள், இது பொது மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை என்பதால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க பள்ளம் ஏற்பட்டுள்ள வழியே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிறுவர்களே தங்கள் கை பட ஒரு அட்டையில் "இங்கு பள்ளம் உள்ளது, வழி இல்லை. மாற்று பாதையில் செல்லவும்" என்பதை வலியுறுத்தும் வகையில் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகளை வைத்து ள்ளனர்.

அதோடு மட்டும் இல்லாமல் நீண்ட நேரமாக அங்கு நின்று அவ்வழி யாக வரும் வாகன ஓட்டுகளுக்கு அறிவுறுத்தியும் உள்ளனர்.

பள்ளி சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது.

Tags:    

Similar News