உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

15 வார்டுகளிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

Published On 2023-01-31 15:13 IST   |   Update On 2023-01-31 15:13:00 IST
  • பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
  • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.

கூட்டத்தில், 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, அண்ணா நகர் 3வது வார்டுக்கு உட்பட்ட ஆற்று பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

அதனை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டது.

அதேபோல், 15 வார்டுகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், அரசின் இலவச வீடு வழங்குதல், மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

மேலும், குடிநீர் பைப்புகளில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

இதனை தொடர்ந்து வருகிற 5 ம் தேதி முனீஸ்வரன் கோவில் கும்பா பிஷேகம் நடைப்பெ றுவதால் அதற்கான சாலையை சீரமைத்து தரவேண்டும். பக்தர்கள் வாகனத்தில் வரும் போது போக்கு வரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சாலை அமைத்து தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உறுதியளித்தார்.

Tags:    

Similar News