உள்ளூர் செய்திகள்

சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்ைத நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Published On 2023-08-25 15:26 IST   |   Update On 2023-08-25 15:26:00 IST
  • அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தனர்
  • மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்

வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 3,304 பள்ளிகளில் 1.88 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

காலை உணவுக்கான சமையல் கூடங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதியில் உள்ள 24 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் உள்ள 528 பள்ளிகள் என மொத்தம் 576 பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரத்து 721 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்ைத நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.

Tags:    

Similar News