உள்ளூர் செய்திகள்

வி.ஐ.டி.யில் ரத்த தான முகாமை வேந்தர்விசுவநாதன் தொடங்கி வைத்தார். அருகில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் உள்ளனர்.

வி.ஐ.டி.யில் ரத்த தான முகாம்

Published On 2022-07-30 08:56 GMT   |   Update On 2022-07-30 08:56 GMT
  • ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
  • 600-க்கும் மேற்பட்ட யூனிட் பெறப்பட்டது

வேலூர், ஜூலை.30-

வி.ஐ.டி.யில் ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி. இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் (யூத் ரெட் கிராஸ்) ரத்த தான முகாம் நடந்தது.

ரத்த தான முகாமை வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று ரத்த தானம் செய்தனர். 600-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி., மேசோனிக் ரத்த வங்கி, ஸ்ரீ நாராயணி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஆகிய மருத்துவ மனைகளில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News