உள்ளூர் செய்திகள்
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடந்த காட்சி.
- நடிகர் விஜய் பிறந்தநாள்
- 48-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினர்.
வேலூர்:
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், முன்னாள் எம், எல்.ஏ ஆலோசனைப்படி வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் என்.நவீன், மாவட்ட தொண்டரணி தலைவர் எம். சீனிவாசன், மகளிர் அணி தலைவி ஐ.தாஹிரா பானு தலைமையில் காட்பாடி ஒன்றிய தொண்டரணி சார்பில் எச். இப்ராகிம், எம்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமில் 48 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கே.கருணாகரன், எஸ்.சுரேஷ், ஜே சாரங்கன், என்..வாசுதேவன், டி.இளங்கோ, ஆர்.வெங்கட், சரத்குமார், பி.லோகேஷ், கே.நவீன், ரியாஸ், மகளிரணி வி. சுதா, வினோத், சச்சின் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.