உள்ளூர் செய்திகள்

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் வங்கிகடன்

Published On 2023-07-31 09:00 GMT   |   Update On 2023-07-31 09:00 GMT
  • 30 சதவீத மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம்
  • கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் 10 சதவீத பயனாளிகளின் பங்களிப்பு 60 சதவீத வங்கி கடன் திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.

ரூ. 5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழி லாகவும் ரூ. 5 லட்சம் முதல் 15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறுதொழிலாகவும் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறுதொ ழிலாகவும் இத்திட்டத்தின் மூலம் வரையறு க்கப்பட்டுள்ளது.

சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்தி றனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். இணை மானிய திட்ட கடன் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும். மேலும் பிற விபரங்களுக்கு வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News