உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளி முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்த காட்சி. தங்க கவச அலங்காரத்தில் கெங்கையம்மன்.

ஆனி மாத கடைசி வெள்ளி முன்னிட்டு பால்குட ஊர்வலம்

Published On 2022-07-16 15:17 IST   |   Update On 2022-07-16 15:17:00 IST
  • குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில்
  • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே சமூக இடைவெளி கடைப்பிடித்து பால்குட ஊர்வலம் நடைபெற்று கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News