வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கதிர் ஆனந்த் எம்.பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு ரத்த சோகை தவிர்க்க விழிப்புணர்வு பிரசார வாகனம்
- கதிர் ஆனந்த் எம்.பி.தொடங்கி வைத்தார்
- நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல், குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசார வாகனம் வரவுள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கதிர் ஆனந்த் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அமலு விஜயன் எம். எல். ஏ., வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1075 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சரா வாகனம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைந்து பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புற வார்டுகளில் வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.