உள்ளூர் செய்திகள்

ஆயுதப்படை வீரர்களுக்கு விபத்து தடுப்பு குறித்து  விழிப்புணர்வு நடந்த காட்சி.

ஆயுதப்படை வீரர்களுக்கு விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2022-11-16 15:16 IST   |   Update On 2022-11-16 15:16:00 IST
  • உயிர் காக்கும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் சிஎம்சி இந்திய மருத்துவ சங்கமும், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும், டாக்டர் இக்ரம் சமூகநல அறக்கட்டளையும் இணைந்து பருவமழை விபத்துக்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

முகாமிற்கு ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மார்ஷல் டாக்டர் அ.மு.இக்ரம் வரவேற்று பேசினார்.

காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ஊர்க்காவல்படை சுரேஷ் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் மகேஷ், துணைத்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன் டராபிக் வார்டன் குழும திட்ட அதிகாரி பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவ குழு தலைவர் டாக்டர் சுக்ரியாநாயக், டாக்டர் பிரகாஷ் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் பருவ மழையில் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு முறைகள், இதய நிறுத்தம், நீங்கள் எப்படி உதவலாம், அடிப்படை உயிர் காக்கும் வழிமுறைகள், உணர்வு உள்ளதா என்று சோதனை செய்யும் முறை, சுவாசக்குழாய் சோதனை செய்யும் முறை, மார்பு அழுத்தங்கள், வாய் வழி சுவாசம், மீட்பு நிலை ஆகிய தலைப்புகளில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News