உள்ளூர் செய்திகள்

போலீஸ் எழுத்து தேர்வில் பணியாற்ற போலீசாருக்கு எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் அறிவுரை வழங்கிய காட்சி.

2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 14,991 பேர் எழுதுகின்றனர்

Published On 2022-11-26 15:19 IST   |   Update On 2022-11-26 15:19:00 IST
  • 1200 போலீசார் பாதுகாப்பு
  • வீடியோ கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்படுகிறது

வேலூர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வு எழுதும் நபர்களுக்கான நடைமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

தேர்வு நாள் அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.

விண்ணப்பதாரர் தேர்வு கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்துக்குள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்.

அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்ப தாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் சென்று நகல் எடுத்து மையத்துக்கு கொண்டு வரவேண்டும்.அழைப்பு கடிதத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி ஏ அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று ஒப்பம் பெற்று வரவேண்டும்.ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என புகைப்படம் ஒட்டிய அரசால் வழங்கிய ஒரு அட்டையை கொண்டு வரவேண்டும்.

தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது.பேனா மற்றும் ஹால்டிக்கெட் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

தேர்வின் போது பேசவோ, சைகை புரியவோ, பிறரை பார்த்து எழுத கூடாது. மீறினால் அவரது தேர்வுநிலை ரத்து செய்யப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தேர்வு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News