உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் காட்சி.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம், இயற்கை பேரிடர் சமாளிக்க ஏற்பாடு

Published On 2022-10-30 14:24 IST   |   Update On 2022-10-30 14:24:00 IST
  • தயார் நிலையில் 750 மணல் மூட்டைகள் உள்ளது
  • அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்

குடியாத்தம்:

குடியாத்தம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பலத்தமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது பல கிராமங்கள் வெளிவட்டாரத்தில் இருந்து பல நாட்கள் துண்டிக்கப்பட்டது

பல இடங்களில் ஏரிக்கரைகளும், வெள்ளநீர் செல்லும் கால்வாய்களும் சேதமடைந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் விளை நிலங்களுக்கும் மழை நீரும், வெள்ளநீரும் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம் மற்றும் மழை பாதிப்பு, இயற்கை பேரிடர் எதிர்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் ஜேசிபி எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை வேலூர் திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 750 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் மணல் மூட்டைகள் கட்டும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இந்த பணிகளை குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தயார்நிலை

மழைக்காலங்களில் மரங்கள் விழுந்தால் அதை அகற்றுவதற்கு தேவையான கருவிகள், கயிறுகள், லைட்டுகள் உள்ளிட்டவைகளும் ஜேசிபி எந்திரங்கள், உரிமை யாளர்களின் தொலைபேசி எண்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளம் மற்றும் இடர்பாடுகளின் போது உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News