வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ், கண்டக்டர்கள் கழிப்பறை பணம் வசூலிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
கழிப்பறைக்கு செல்ல பணம் கேட்டதால் பஸ் கண்டக்டர்கள் வாக்குவாதம்
- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர் கட்டாயம் பணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு
- வேறு எங்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என புகார்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது.
இதை யடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் கட்டண கழிப்பறையாக அறிவிக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்கு வந்து கழிப்பறைக்கு செல்லும் பயணிகளிடம் சிறுநீர் கழிக்க ரூ 5 மற்றும் இயற்கை உபாதைக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது அங்கிருந்த பெண் ஒருவர் கட்டணம் கேட்டுள்ளார். இதற்கு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் அனைத்து ஊர்களிலும் எங்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை.
இங்கு மட்டும் ஏன் கட்டணம் கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒப்பந்ததாரர் கட்டாயம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே கழிப்பறையை உபயோகிக்க முடியும் இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
எங்களிடம் கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தனர்.
அதற்கு குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர் நீங்கள் மட்டும் பஸ்ஸில் இலவசமாகவா பயணிகளை ஏற்றி செல்கிறீர்கள் என கூறியதால் அவர்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.