உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்த காட்சி.

ரூ.91.61 லட்சத்தில் புதிய திட்ட பணிக்கு ஒப்புதல்

Published On 2022-12-31 14:58 IST   |   Update On 2022-12-31 14:58:00 IST
  • பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் நடந்தது
  • கவுன்சிலர்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா மற்றும் ஒடுகத்தூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் மற்றும் செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.

ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வது என 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மின்விளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் தற்போது நடந்து வரும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.

அனைத்து வார்டுகளிலும் தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை, மினி டேங், இலவச வீடு வழங்குதல், நிலுவையில் உள்ள ஈமச்சடங்கு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News