உள்ளூர் செய்திகள்

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் மீண்டும் விரிசல்

Published On 2022-09-30 15:15 IST   |   Update On 2022-09-30 15:15:00 IST
  • 3 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை
  • சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்:

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட் டுள்ளதால் வேலூர் மாநகராட்சிக்கு உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர்

வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாலாற்றின் கரையோரம் ராட்சத குழாய் அமைக்கப் பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலை யில் மாதனூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குழாய்உடைப்பு சரிசெய்யப்பட்டது.

இந்தநிலையில் குழாயின் உறுதித்தன்மையை அதிகாரி கள் ஆய்வு செய்தனர். அப் போது ஆம்பூர் அருகே சுண்ணாம்புக்கல் என்ற பகுதியில் குழாயில் விரிசல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே அதை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த குழாய் உடைப்பு மற்றும் விரிசல் காரணமாக வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்துக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நீர் ஆதாரம் இதனால் 3 நாட்களாக குடி நீர் வினியோகிக்கப்பட வில்லை. எனினும் வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்துக்கு குடிநீர் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை) குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கப் படும் என அதிகாரிகள் தரப பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாநகராட்சி சார்பில் உள்ளூர் நீர் ஆதாரத்தினை கொண்டு குடிநீர் வினி யோகம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News