உள்ளூர் செய்திகள்

வேட்டை கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட பைக், துப்பாக்கி, டார்ச் லைட்.

குடியாத்தம் வனப்பகுதியில் வேட்டையாட வந்த ஆந்திர கும்பல்

Published On 2022-10-17 09:46 GMT   |   Update On 2022-10-17 09:46 GMT
  • பைக்ைக போட்டு விட்டு தப்பி ஓட்டம்
  • போலீசாரவிசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் குடியாத்தம் வனச்சர கத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் கொட்டாளம் வனப்பகுதியை அருகே ரோந்து சென்றனர்.

அப்போது ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டி ருந்தனர்.

ரோந்து சென்ற வனத்துறையினரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றனர் அதற்குள் கும்பல் தப்பி சென்றனர்.

கும்பல்

மோட்டார் சைக்கிளுடன் நாட்டு துப்பாக்கி, டார்ச் லைட் மற்றும் வேட்டையாட பயன்படுத்தும் உபகர ணங்கள் இருந்தது.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து வந்த அந்த கும்பல் வனவிலங்கு அல்லது மானை வேட்டையாடி அதனை விற்க வந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News