உள்ளூர் செய்திகள்

கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் குமார வேல் பாண்டியன் பார்வையிட்ட காட்சி.

விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் கண்காட்சி

Published On 2023-03-30 15:03 IST   |   Update On 2023-03-30 15:03:00 IST
  • கலெக்டர் பங்கேற்று பார்வையிட்டார்
  • விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் என்று பேச்சு

வேலூர்:

விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய உள்ளூர் ரக சிறுதானியங்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய ரகங்களை முன்னெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்றால் மட்டுமே லாபம் பெற முடியும்.

வெளிநாடுகளில் சிறுதானியங்களை பலர் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இன்றளவும் அந்த நிலை நீடிக்கிறது. விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் லாபம் கிடைக்கும். வேலூர் மாவட்டத்தில் நிலக்கடலை பயிரிடுகின்றனர்.

இந்த நிலக்கடலையை எவ்வாறு உணவுப் பொருட்களாக பயன்படுத்த வேண்டும் என அறிந்திருக்க வேண்டும். விவசாயிகள் விவசாயப் பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் கால்நடைகளையும் வளர்க்க வேண்டும்.

ஏனென்றால் ஆண்டுதோறும் விவசாயத்தில் லாபம் கிடைக்காது. மற்ற நேரங்களில் கால்நடைகள் வளர்த்தால் அதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் தமிழகத்தை அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பயிர்களின் அடிப்படையில் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை எதற்கு என்றால் அந்தந்த பகுதியில் விளைவிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கவும் அதை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்காடிகளில் வெளிநாட்டு பொருட்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அந்த அங்காடிகளில் பாரம்பரிய உள்ளூர் சிறுதானியங்கள் மற்றும் உணவு வகைகள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும். அந்த காலத்தில் முருங்கையில் முருங்கைக்காய் காய்ந்து விட்டால் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஆனால் தற்போது முருங்கைக்காைய பொடியாக்கி இலையை காய வைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.

இதே போன்று ஒவ்வொரு பொருளையும் மதிப்பு கூட்டும் வகையில் அதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குந ர்ஸ்டீபன் ஜெயக்குமார், கால்நடை பராமரி ப்புத்துறை, மண்டல இணை இயக்குநர், ஜெ.நவநீத கிருஷ்ணன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் செந்தில்கு மாரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறி யாளர் ஸ்ரீதர், வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), ஏ.வெங்கடேஷ் தோட்டக்கலை துணை இயக்குநர் மோகன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் சோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News