உள்ளூர் செய்திகள்

பெரியார் பூங்காவில் தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-04-09 14:48 IST   |   Update On 2023-04-09 14:48:00 IST
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • பூங்காவை திறக்க கோரிக்கை

வேலூர்:

வேலூர் கோட்டை வெளியே அகழியை ஒட்டி பெரியார் பூங்கா செயல்பட்டு வந்தது. வேலூர் மாநகர் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்தது. இந்தநிலையில் பெரி யார் பூங்கா மூடப்பட்டது. பல மாதங்கள் ஆனதால் பூங்கா வில் ஆங்காங்கே செடி கொடிகள் முளைத்தன. பசுமையாக காணப்பட்ட புற்கள் காய்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பூங்காவில் மர்மநபர்கள் அடிக்கடி தீவைக் கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து செடிகள் கருகி விட்டது. மேலும் மரங்களும் சேதமடைந்துள்ளது.

தீவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் பெரியார் பூங்காவையும் திறப்பதற்கான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News