உள்ளூர் செய்திகள்

சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் சாதனை

Published On 2022-11-17 09:49 GMT   |   Update On 2022-11-17 09:49 GMT
  • 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்
  • மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆசிர்வாத் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 133 பேர் தலா 10 திருக்குறள்கள் என 133 அதிகாரங்களைக் கொண்ட 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்.

இது உலக சாதனையாகும். இந்த திருக்குறள் ஒப்புவித்தல் சாத னையை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. இந்த நிலையில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதனை படைத்த 133 மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எஸ்.மஞ்சுநாத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரமிளா கண்ணன் வரவேற் றார். சிறப்பு விருந்தினராக டி.வி. புகழ் ஈரோடு மகேஷ், திரைப்பட இசையமைப்பாளர் சி.அரவிந்த்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், மாணவர்களின் சாத னைக்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். சாதனை நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல், தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.கார்த்திக் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளியின் கணக்கு அலுவலர் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News