பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
சிறுவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
- விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் வாரத்தில் 1 நாள் ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி வேலூர் சேண்பாக்கம் சோளாபுரியம்மன் கோவில் தெருவில் திட்டத் தொடக்க விழா இன்று நடந்தது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை இளைஞரணி மாவட்டத் தலைவர் ஏ. நவீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாரங்கன் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வெங்கட், நகர தலைவர் ரியாஸ் ஒன்றிய தலைவர் நவீன், நிர்வாகி அம்மு உட்பட பலர் கலந்து கொண்டனர்.