குடியாத்தத்தில் வீட்டில் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை சுசிலாவை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்த காட்சி.
குடியாத்தத்தில் தீ விபத்தில் சிக்கி தவித்த ஓய்வு பெற்ற ஆசிரியை
- கதவை உடைத்து மீட்டனர்
- தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அப்புசுப்பையர் வீதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவரது மனைவி சுசிலா (வயது 80) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேற்று மாலையில் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு மூதாட்டி சுசிலா இருந்துள்ளார் அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த சமையல் அறையில் தீ பற்றி மளமளவென வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டி சுசிலாவை மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.