உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன உணவு விநியோக வாலிபரை தாக்கிய ஒருவர் கைது

Published On 2023-01-29 15:20 IST   |   Update On 2023-01-29 15:20:00 IST
  • ஜெயிலில் அடைப்பு
  • தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்தவர் திருமலைவாசன் ( வயது 22) இவர் வேலூர் மாநகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை இரவு காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உணவு சப்ளை செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது மோதியுள்ளனர்.

இதனை திருமலைவாசன் தட்டி கேட்டார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 பேரும் சேர்ந்து திருமலை வாசனை சரமாரியாக தாக்கினர்.

அந்த வழியாக வந்தவர்கள் திருமலை வாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து காட்பாடியை அடுத்த வெள்ளக்கல் மேடு பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News