உள்ளூர் செய்திகள்

தள்ளுவண்டி மீது சொகுசு கார் மோதியது

Published On 2023-08-21 09:15 GMT   |   Update On 2023-08-21 09:15 GMT
  • 2 பேர் உயிர் தப்பினர்
  • சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கொய்யாக்காய் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளிகொண்டா பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 50) இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தள்ளு வண்டியில் கொய்யா வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வெயில் காரணமாக மாற்று இடத்திற்காக கொய்யாகாய் விற்பனை செய்ய தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை தள்ளி சென்றார்.

வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த சொகுசு கார் கொய்யாக்காய் தள்ளு வண்டி மீது வேகமாக மோதியது. இதில் தள்ளுவண்டி உருக்குலைந்த நிலையில் சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது.

விபத்தில் காரில் இருந்த தொழிலதிபர் பிரகாஷ் (50) மற்றும் கொய்யாக்காய் வியாபாரியான பழனி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

Similar News