உள்ளூர் செய்திகள்

100 அடி ஆழ கிணற்றில் விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் மீட்ட காட்சி.

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயி

Published On 2023-03-20 15:27 IST   |   Update On 2023-03-20 15:27:00 IST
  • தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
  • மழையால் மண் சரிந்து பரிதாபம்

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் கெங்கசானிகுப்பம், துத்திபுளியமரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 48) விவசாயி.

இவர் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார். இன்னிலையில் நேற்று பெய்த கனமழையினால் கிணற்றின் சுற்றுப்பகுதி முழுவதும் மழைநீரால் வலுவிழந்து காணப்பட்டுள்ளது. இதனை கவனிக்காத ஐயப்பன் கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது வலுவிழந்து உள்ள கிணற்றின் மண் சரிந்து சுமார் 100அடி ஆழமுடைய கிணற்றில் விழுந்தார்.

இதில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்ட நிலையில் மேலே வர முடியாமல் வலியால் துடித்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த நிலைய அலுவலர் குமார் மற்றும் சசிதரன் அடங்கிய குழுவினர். கிணற்றில் 100 அடி ஆழத்தில் தவித்த ஐயப்பனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News