உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி ஏமாற்றும் கும்பல்

Published On 2023-11-17 15:21 IST   |   Update On 2023-11-17 15:21:00 IST
  • பணம் பறிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்
  • கலெக்டர் எச்சரிக்கை

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சில நபர்கள் தங்களுக்கு உயர் அரசு அலுவலர்களை தெரியும் என்று பொது மக்களிடம் கூறுகின்றனர்.

அரசு அலுவலர்களிடம் பேசி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல், காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும்.

கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலு வலகங்கள் முன்பாக சில நபர்கள் பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடை யாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையூறு அளிக் கும் வகையில் பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுப் வர்கள் மீதும், பிறரின் கோரிக்கை மனுக்களை இதேபோன்று சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கட் பட்டவர்கள் உடனடியாக 9498042453 என்ற வாட்ஸ்-அட் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News