சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் வாகனம் மோதி மாடு காயமடைந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாட்டை அந்த வழியாக சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
- அந்த வழியாக சென்ற கலெக்டர் பொதுமக்கள் உதவியுடன் மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார்
- சமூக ஆர்வலர்கள் பாராட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நேற்று மாலை பிள்ளையார் குப்பம் சென்று விட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரங்காபுரம் 6 வழிச்சாலையில், மாடு ஒன்றின் மீது கார் மோதி, மாடு பலத்தகாயங்களுடன் ரோட்டில் கிடந்தது.
இதைப்பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி வேகமாகச் சென்று மாட்டை தொட்டுப் பார்த்தார். அதன் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால், அதனால் எழமுடியவில்லை. மேலும் அதன் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதைப்பார்த்த கலெக்டர் பொதுமக்கள் உதவியுடன் ரத்தத்தை துடைத்து, விட்டு, உட டியாக ஒரு வாகனத்தை வரவைத்தார். பின்னர் அந்த மாட்டின் கால்கள்பத்திரமாக கட்டப்பட்டு, பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு, வேலுார் மண்டல கால்நடை பராமரிப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவர் துறை அதிகாரிகளுக்கு போன் செய்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கலெக்டரின் செயலைப் பாராட்டிச் சென்றனர்.