உள்ளூர் செய்திகள்
காதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
- போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பன்மடங்கி கிராமத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர.
அதன்பேரில் போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.