உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் சுனில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

வேலூரில் கொசு ஒழிப்பு பணிக்கு புதிதாக 60 எந்திரங்கள்

Published On 2022-06-13 14:38 IST   |   Update On 2022-06-13 14:38:00 IST
  • உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
  • மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்த் குமார் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் வருகிற 21-ந் தேதி வேலூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்க வேலூருக்கு வருகைதரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணி களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்வது, மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு கவசங்கள் வாங்குவது எனவும்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிக்காக புதிதாக 60 எந்திரங்கள் வாங்குவது.

மாநகராட்சியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களுக்கு புதிதாக ரூ.10 லட்சம் மதிப்பில் பேட்டரிகள் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News