உள்ளூர் செய்திகள்

வேலூர் நேதாஜி மைதானத்தில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட காட்சி.

வேலூரில் 591 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2022-06-25 10:59 GMT   |   Update On 2022-06-25 10:59 GMT
  • அவசர வழிகளை செயல்படுத்தி காட்ட உத்தரவிட்டனர்.
  • சில வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு

வேலூர்:

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் காட்பாடி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் தனியார் பள்ளிகளில் பயன்ப டுத்தப்படும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நேதாஜி மைதானத்தில் இன்று நடந்தது.

இந்த ஆய்வின் போது 591 பள்ளி, கல்லூரி வாகனங்கள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனை உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தாசில்தார் செந்தில், வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக னங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவசர வழிகளை செயல்படுத்தி காட்ட உத்தரவிட்டனர்.

ஆய்வுக்கு வந்த சில வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை உடனே சரி செய்ய உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News