உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உதவி கலெக்டர் வெங்கட்ராமனிடம் மனு அளித்த காட்சி.

குடியாத்தம் தாலுகாவில் உள்ள 5 ஊராட்சிகளை திருப்பதூர் மாவட்டத்தில் சேர்க்க கூடாது

Published On 2023-02-18 08:32 GMT   |   Update On 2023-02-18 08:32 GMT
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
  • மாவட்டத் தலைநகரம் 65 கி.மீ.தூரம் உள்ளதாக புகார்

குடியாத்தம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப் நம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

இந்த கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது எந்த பலனையும் அளிக்காது.

இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ.தூரம் உள்ளது. இது இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தலுகா அலுவலகம் செல்ல ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது.

உடனடியாக குடியாத்தம் செல்ல தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலப்பணியை உடனே தொடங்க கேட்டு கொள்கிறோம்.

5 ஊராட்சிகளை மையப் படுத்தி அகரம்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதுவரையில் மாதனூர் மருத்துவமனையை பயன் படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News