உள்ளூர் செய்திகள்

அரங்கநாத பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த காட்சி.

5 வாகனத்தில் அரங்கநாதர் பவனி

Published On 2023-01-29 15:14 IST   |   Update On 2023-01-29 15:14:00 IST
  • பள்ளிகொண்டா கோவிலில் ரதசப்தமியையொட்டி விழா நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் திருக்கோயில் ஆண்டுதோறும் தை அமாவாசை முடிந்த 7-ஆம் நாள் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். 5 விதமான வாகனங்களில் அரங்கநாதா் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பார். இதே போல் நேற்று காலை முதலே விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 1 மணிக்கு சேஷ வாகனத்திலும், பிற்பகல் 4 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பவனி வந்தாா். அப்போது அா்ச்சகா்கள் பிரபந்த பாடல்களைப் பாடினா்.

உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நித்யா, கோயில் நிா்வாக அதிகாரி நரசிம்மமூர்த்தி, ஆய்வா் சுரேஷ்குமார் கோயில் ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News