உள்ளூர் செய்திகள்

 தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் கவர்னர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த காட்சி.

வி.ஐ.டி.யின் 37-வது பட்டமளிப்பு விழா

Update: 2022-08-10 08:47 GMT
  • வருகிற 18-ந் தேதி நடக்கிறது
  • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்

வேலூர்:

வி.ஐ.டி.யின் 37-வது பட்டமளிப்பு விழா வரும் 18-ந் தேதி வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற உள்ளது. பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் திரு.ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.

பட்டமளிப்பு விழா

வி.ஐ.டி. வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்க உள்ளார். பட்டமளிப்பு விழாவில் 215 ஆராய்ச்சி மாணவ, மாணவியர் , தங்கப்பதக்கம் பெற்ற 62 மாணவ, மாணவிகள் உள்பட 8161 மாணவ-மாணவிகள் பட்டம் பெற உள்ளனர்.

மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த அமெரிக்காவின், தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குனர் டாக்டர். சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர். ஸ்ரீவாரி சந்திரசேகர் மற்றும் அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணைத் தூதர் ஜூடித் ரவின் பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் சமீபத்தில் மாண்புமிகு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Tags:    

Similar News