உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்த காட்சி.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் 30 காட்டெருமைகள்

Published On 2023-02-08 10:05 GMT   |   Update On 2023-02-08 10:05 GMT
  • குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
  • மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வலியுறுத்தல்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நடந்தது.

கூட்டத்தில் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் அந்த 6 மணி நேரத்தில் மட்டும் 16 முறைகளுக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் விளைநிலங்களுக்கு விவசாயிகளால் தண்ணீர் பாய்ச்சுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக ஆவேசத்துடன் பேசினார்கள்.

மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயி ஒருவர் பேசுகையில்:-

மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக 24 மணி நேரமும் வழங்கினால் யாரும் அதை திருடி சென்று விட மாட்டார்கள்.

எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதேபோன்று மேலரசம்பட்டு, கொட்டாவூர், தீர்த்தம் போன்ற மலையோர பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கடலை பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது.

இது குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் முறையூட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

மேலும் கடன் வாங்கி பயிர் செய்யும் விவ்சாயிகள் வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஆவனங்களை கொடுத்தால் ஒரு ஆண்டுகள் ஆகின்றது பணம் வர அதுவரை நாங்கள் எப்படி கடனை கொடுப்பது என கூறினார்.

இதேபோன்று பயிர்களில் நோய் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, மேலும் விவசாயிகளுக்கு என்ன என்ன உபகரனங்கள், என்ன விதைகள்.

தற்போது உள்ளது, எதை பயிர் செய்தால் முழுமையாக லாபத்தை பெற முடியும் என வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.

Tags:    

Similar News