திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 3 பேர் குழு விசாரணை
- துணைவேந்தர் ஆறுமுகம் தகவல்
- தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரத்தில் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளு வர்பல்கலைக்கழகம் இயங்கிவரு கிறது.
பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 70-க்கும் மேற் பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தா ண்டு இளநிலை மற்றும்
முதுநிலை படிப்புகளு க்கான பரு வத்தேர்வு நடந்துவரும் நிலையில், முதுநிலை கணிதவியல் பாடத்தேர் வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் மீண்டும் இந்தாண்டு அப்படியே வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதுநிலை கணிதவியல் பாடத் தேர்வில் கடந்த ஏப்ரல் மாதம் கேட் கப்பட்ட கேள்வித்தாள் மீண்டும் கேட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவ ள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், செய்தியாளரிடம் கூறியதாவது:-
பழைய கேள்வித்தாள் வெளியாகியது தொடர்பாக 3 பேர் அடங் கிய குழு அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், பழைய கேள்வித்தாளை மீண்டும் வழங்கிய தனியார் கல் லூரியின் பேராசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் மன்னிப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியுள் ளார்.
அவர் மீது 3 பேர் கொண்ட குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான கல்விப் பணிகளி லும் அவரை வரும் காலங்களில் ஈடுபடுத்த மாட்டோம்.
நிலுவையில் உள்ள தேர்வு களுக்கான கேள்வித்தாள்களில் பழைய கேள்வித்தாள் மீண்டும் வருமா? என தெரிய வில்லை. கைவசம் இருக்கும் கேள்வித் தாள்களை பிரித்து சரிபார்த்து பிரச்சி னைகளை வரவழைப்பதை விட அதை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடலாம்.
அடுத்த பருவத் தேர்வுகளில் பழைய கேள்வித் தாள் வெளியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.