உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியாத்தம் அடுத்த பரதராமி வார சந்தை ஏலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குடியாத்தம் அடுத்த பரதராமி வாரசந்தை ரூ.21.15 லட்சத்து ஏலம்

Published On 2023-03-30 14:56 IST   |   Update On 2023-03-30 14:56:00 IST
  • போட்டி போட்டு கேட்டனர்
  • 45 நிமிடங்கள் நடைபெற்றது

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதி வேலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தொடங்குகிறது.

பரதராமில் வாரச்சந்தை மிகவும் பிரபலம் பரதராமி சுற்றுப்புற பகுதிகள் மட்டும் இல்லாது ஆந்திராவில் இருந்து ஏராளமானோர் பரதராமி வாரச் சந்தைக்கு தங்களின் கால்நடைகள், காய்கறி உள்ளிட்டவைகளை கொண்டு வருவார்கள்.

வேலூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான வார சந்தைகளில் பரதராமி வாரச் சந்தையும் ஒன்றாகும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பரதராமி வாரச்சந்தை ஏலம் விடும் நிகழ்ச்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் நடைபெற்றது. குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் வார சந்தை ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைப்புத் தொகை செலுத்தி ஏலத்தை கேட்டனர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 21 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஆண்டுக்கான பரதராமி வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது.

கடந்த ஆண்டு பரதராமி வாரச் சந்தை 15 லட்சத்தி 57 ஆயிரம் ரூபாய்க்கு விடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 58 ஆயிரத்திற்கு ஏலம் சென்றது. ஏலத்தி ற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் எஸ்.அசோக்குமார், காசாளர் எம்.சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News