தணிகைமலை பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள மூலைகேட் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் அடி உயரமுள்ள வேலாடும் தனிகை மலை அமைந்துள்ளது. இதில் சுமார் 500 ஆண்டுகளாக ஸ்ரீ பாலமுருகன் அமைந்து அனைவருக்கும் அருள்பாளித்து வருகின்றார்.
இன்னிலையில் இன்று தைப்பூசம் திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி முதலே விழாவானது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் நேற்று தைப்பூசம் திருக்கல்யாணம் என்பதால் இதில் காலை 9 மணிக்கு டாக்டர் கவிஞர் வாரியார் தாசன் அவர்களால் கந்தன் காலடியை வணங்கினான் என்ற சிறப்பு சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.
பின்பு முருகன் வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடைப்பெற்றது.இதனையடுத்து நடைப்பெற்ற மாலை மாற்றும் நிகழ்ச்சியானது அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடைப்பெற்றது.
திருக்கல்யாணத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நடைப்பாதையாக வருகைத்தரும் பக்தர்கள் வரவேற்க கண்ணன், கிருஷ்னன், செல்வராஜி, குமார், பாலு, சங்கர், பண்ணீர்செல்வம், சீனிவாசன், இராஜாராம், குமார், வெங்கடேசன் ஆகிய கோயில் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மலை முழுவதும் இருந்த பக்தர்களின் கூட்டத்தை பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தனர்.