உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் மீது பட்டாசு வீசிய 2 வாலிபர்கள் கைது

Published On 2023-08-13 14:36 IST   |   Update On 2023-08-13 14:36:00 IST
  • போலீசாரின் ரோந்து பைக்கை உடைத்ததால் பரபரப்பு
  • மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகரில் ஆடி 4-ம் வெள் ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.

இதனையொட்டி நெல்லூர்பேட்டை ஏரிக் கரை பகுதியில் இருந்து பேரணாம்பட்டு சாலை வழியாக மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது புத்தர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 20), மகாவி(29) ஆகியோர் பட்டாசுகளை கொளுத்தி பக்தர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கரக ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பட்டாசு வீசியவர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டிய தோடு, அங்கு நிறுத்தியிருந்த போலீசின் ரோந்து பைக்கை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், மகாவி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News