1,700 ரேசன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
- அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் அவதி.
- அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தல். அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தல்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,700 ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இவர்கள் பணிக்கு வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சேர்ந்த மாநில செயலாளர் செல்வம் கூறுகையில்:-
அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேசன் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 9-ந் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் 1300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.