உள்ளூர் செய்திகள்

வேலூர் ஆற்காடு ரோட்டில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார்.

வேலூரில் நெரிசலை தவிர்க்க ஆற்காடு சாலையில் நின்ற 120 பைக்குகளுக்கு அபராதம்

Published On 2022-10-07 10:28 GMT   |   Update On 2022-10-07 10:28 GMT
  • சாலை தடுப்புகள் அகற்றம்
  • போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது

வேலூர்:

வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிமாநிலங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பலர் கடைகளின் முன்பே வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வேலூர் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 120 பைக் களுக்கு உடனடி அபராதம் விதித்தனர்.

அங்குள்ள சாலை நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன எதனால் ஆர்காடு ஆக்கிரமிப்பு இல்லாமல் காணப்பட்டது.

ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக பல வருடங்களாக நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்கதையாக உள்ளது. ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரி சலை தவிர்ப்பதற்காக சாலையின் நடுவே இருப்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.இதனால் ஓரளவு வாகனங்கள் வரிசையாக சென்றதால் நெரிசல் குறைவாக இருந்தது.இந்த நிலையில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.இதனால் சில வாகனங்கள் குறுக்கு நெடுக்கமாக சாலையில் திரும்புகின்றன.இதன் காரணமாக ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றியதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது அதை ஏன் அகற்றினார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News