உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் 111-வது ஆண்டு பேரவை கூட்டம்

Published On 2022-12-30 15:38 IST   |   Update On 2022-12-30 15:38:00 IST
  • பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய கடன் உதவிகளை வழங்கினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் 111வது ஆண்டு விழா பேரவை கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் எம்.பாஸ்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.என். சுந்தரேசன், நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ஐ.அன்வர் பாஷா, ஜி.ஜெயக்குமார், ஆர்.ரவிசங்கர், என். கோவிந்தராஜ், ஆர். தமிழரசி, பி.கவிதாபாபு, எஸ்.சம்பத்குமார், எஸ்.கே.சிலம்பு செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் பொது மேலாளர் ஏ.எஸ். கோபிநாத் வரவேற்றார். வங்கியின் மேலாண்மை இயக்குனர் த.ரா.ராஜதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியும், பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய, கூட்டுறவு சங்கத்திற்கும், ஆட்டோ வாங்க உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் வங்கி இயக்குனர்கள் ஏ.நடராஜன், தனக்கோடி எஸ்.எம்.தேவராஜ், நகர மன்ற உறுப்பினர் சி. என்.பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் பேரணாம்பட்டு கங்காதரன், வி.இ.கருணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொது மேலாளர் கே.அருள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News