உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநாடு நடந்த காட்சி.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநாடு

Published On 2022-09-27 15:52 IST   |   Update On 2022-09-27 15:52:00 IST
  • குடியாத்தத்தில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்டம் மாநாடு நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பீமராஜன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் அறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் ஷாபுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சென்னை மண்டல செயலாளர் மகேஷ், மாநில பொருளாளர் சாமுவேல், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சட்ட விரோதமாக வாய்மொழி உத்தரவாக நிர்வாகமே பணி வழங்காமல் தொழிலாளர்களின் சம்பளம் முறைகேடு செய்யப்படுவதற்கும் செயற்கையாக ஆள் பற்றாக்குறை ஏற்படுத்து வதற்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கொள்ளுதல்

உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநாட்டை முன்னிட்டு சங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News