உள்ளூர் செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவு

Published On 2023-02-16 15:07 IST   |   Update On 2023-02-16 15:07:00 IST
  • மின்வாரிய அதிகாரிகள் தகவல்
  • வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,27,397 மின் இணைப்புகள் உள்ளன

வேலூர்:

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார இணைக்கும் படி துரிதமாக நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் 11,27,397 மின் இணைப்புகள் உள்ளன.

இந்த அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News