ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்கள் முற்றுகை
- பணிதளப் பொருப்பாளரை மாற்ற வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்தையையடுத்து கலைந்து சென்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள திப்பச்சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 850 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இங்கு திப்பச முத்திரம், குச்சிப்பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்து இரண்டு பிரிவுகாளாக பிரிந்து 100 நாள் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது செய்து வரும் 100 நாள் வேலையை சரியாக வழங்க வில்லை எனவும், பணிதளப் பொருப்பாளரை மாற்ற வேண்டும் எனவும் பல நாட்களாக அதிகாரிகளிடம் கூறிவந்துள்ளனர்.
அதிகாரிகள் இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில் சரியான முடிவு கிடைக்காததால் ஆத்திரமடைந்த பணியாட்கள் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் வேலையாட்களின் கோரிக்கையை ஏற்று பனிதளப் பொருப்பாளரை மாற்றியும், நாளை முதல் தொடர்ந்து அனைவருக்கும் வேலை வழங்குவதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் இரு கிராமத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு அந்தந்தப்ப குதியை சேர்ந்த நபர்களை பணி பொருப்பாளராக பணியாற்றுவார் என போலீசார் மற்றும் அதிகாரிகளின் கூறினர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.