உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே வாகன சோதனை: ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-11-11 15:00 IST   |   Update On 2022-11-11 15:00:00 IST
  • பேரண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மொஹிதீன் ஜின்னா, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேரண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த காரில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 190 கிலோ எடையுள்ள அந்த பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்த நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மொஹிதீன் ஜின்னா, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ரூ.95 ஆயிரத்து 550 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி 4 யூனிட் கற்களை டிப்பர் லாரியில் கடத்தி சென்ற அரூர் பாப்பநாயக்கன்வலசை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News