உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.

வீர மணவாளன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-25 15:27 IST   |   Update On 2023-02-25 15:27:00 IST
  • 2-ம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
  • அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான வீரமணவாளன் கோயில் உள்ளது. கிராம மக்களால் கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று யாகசாலை பூஜைகள் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணா ஹுதி நடைபெற்றது.

பின்னர் கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை வலம்வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

வீரமணவாள சுவாமி, காத்தாயி அம்மன், பச்சையம்மன், சப்த்தகண்ணிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மன்னார்குடி, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News