உள்ளூர் செய்திகள்

சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழி கொண்டை பூ.

வேதாரண்யம்: கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து மண் வளத்தை காக்கும் பட்டதாரி வாலிபர்

Published On 2023-02-07 09:36 GMT   |   Update On 2023-02-07 09:36 GMT
  • விவசாயம் மீது ஆர்வம் கொண்ட புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்றார்.
  • தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்தார்.

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்.

இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார்.

விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது:-

தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்து உள்ளேன்.

இந்த பூ கிலோ ரூ. 75 முதல் 100 வரை சந்தையில் விற்ப்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்.

என எதிர்பார்க்கிறேன் மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.

Tags:    

Similar News