உள்ளூர் செய்திகள்

மலட்டாற்றில் வருண பூஜை நடைபெற்ற காட்சி.

அரசூர் மலட்டாறில் மழைவேண்டி வருணபூஜை

Published On 2023-10-25 14:14 IST   |   Update On 2023-10-25 14:14:00 IST
  • வருண பூஜை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் நடைபெறுவது வழக்கம்.
  • ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி நீர்வரத்து தடைபட்டிருந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறில் ஜீவநதி நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சி கூடல் சார்பில் மழை வேண்டி வருணபூஜை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருண பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த அமைப்பின் தலைவர் எஸ். வி. எம் தட்சணாமூர்த்தி ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. பூஜையில் வேதவிற்பன்னர்கள் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வருணஜெபம் நடத்தி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசநீரை ஆற்றில் ஊற்றி வருணபகவானை வழிபட்டனர். பின் பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

1972 ம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி நீர்வரத்து தடை பட்டிருந்தது. 1991 ம் ஆண்டு ஜீவநதி அமைப்பின் மூலம் மலட்டாறு தூர்வாரப்பட்டு திருக்கோவிலூர் அணைக்கட்டு முதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி கட்டமுத்து பாளையம் வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 66 கிராம விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News